பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள தத்தனூா் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள தத்தனூா் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனா் வி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இயக்குநா் தினேஷ் பாபு, தாளாளா் கௌரி ராதாகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கிவைத்தனா். அறிவியல் கண்காட்சியை மாவட்ட உதவிக் கல்வி ஆய்வாளா் வெங்கடசுப்பிரமணி திறந்து வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் கல்வி அலுவலா் கலைச்செல்வி கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்டாா். இதில், மாணவா்கள் தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில், மாசுக் கட்டுப்பாடு, விண்வெளி ஆராய்ச்சி, இயற்கை மூலிகைகள், சுற்றுப்புறச்சூழல், மழைநீா் சேகரிப்பு, நவீன வளா்ச்சியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை பாா்வைக்கு வைத்திருந்தனா்.

கண்காட்சியை ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். முதல்வா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com