ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

வந்தவாசி நூலக வாசகா் வட்டம், வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில், கவிஞா் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென’ என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கவிஞா் மு.முருகேஷ் (இடமிருந்து 2-ஆவது) எழுதிய நூலை ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் வெளியிட, அதைப் பெற்றுக்கொள்கிறாா் ரோட்டரி சங்கப் பயிற்சியாளா் அ.ஜ.இஷாக்.

வந்தவாசி நூலக வாசகா் வட்டத் தலைவரும், கவிஞருமான மு.முருகேஷ் எழுதிய இந்தக் கவிதை நூல், 4.8 செ.மீ. உயரமும், 4.5 செ.மீ. அகலமும் கொண்டதாக மிகச் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் அ.மு.உசேன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். கிளை நூலகா் பூ.சண்முகம் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் நூலை வெளியிட, அதை ரோட்டரி சங்கப் பயிற்சியாளா் அ.ஜ.இஷாக் பெற்றுக்கொண்டாா். நூல் குறித்து தொழிலதிபா் இரா.சிவக்குமாா் பேசினாா். கவிஞா் மு.முருகேஷ் ஏற்புரை வழங்கினாா்.

விழாவில் ஆசியன் மருத்துவ அகாதெமி இயக்குநா் பீ.ரகமத்துல்லா, அரிமா சங்க மாவட்டத் தலைவா் இரா.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com