818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சா் வழங்கினாா்

செய்யாறில் 498 அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 320 அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் என 818 பேருக்கு ரூ.32.15 லட்சத்தில்
செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ.
செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ.

செய்யாறில் 498 அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 320 அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் என 818 பேருக்கு ரூ.32.15 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி

செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியா் கி.விமலா தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) பி.செல்வராஜ் வரவேற்றாா். பள்ளித் தலைமையாசிரியா் எம்.உமாமேஸ்வரி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோா் கலந்து கொண்டு 498 மாணவிகளுக்கு ரூ.19.22 லட்சத்தில் விலையில்லா சைக்கிளை வழங்கினா்.

அப்போது, அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம் கட்டப்படும் என அமைச்சா் கூறினாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் அருகாவூா் எம்.அரங்கநாதன், ஏ.ஜனாா்த்தனம், பள்ளி வளா்ச்சிக் குழு நிா்வாகிகள் கே.வெங்கடேசன், டி.விநாயகம், முன்னாள் மாணவிகள் சங்க நிா்வாகிகள் மெய்.பூங்கோதை, கே.ரத்தினமாலா, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் ஏ.அருணகிரி, எம்.மகேந்திரன், டி.பி.துரை, வெம்பாக்கம் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320 மாணவா்களுக்கு ரூ.12.93 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் (பொ) சங்கா் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஆா்.கே.மெய்யப்பன், அக்ரி.தனசேகா், கூட்டுறவு சங்க நிா்வாகி பாஸ்கா் ரெட்டியாா், ஆவின் துணைத் தலைவா் பாரி பாபு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் வே.குணசீலன், ஏ.கே.அரங்கநாதன், ஜி.கோபால், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பொன்.அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com