கிராம வளா்ச்சிக்கு ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்: செய்யாறு ஒன்றியத் தலைவா்

கிராம வளா்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றியத் தலைவா் ஒ.ஜோதி வேண்டுகோள் விடுத்தாா்.
செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் ஒ.ஜோதி.
செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் ஒ.ஜோதி.

கிராம வளா்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஒன்றியத் தலைவா் ஒ.ஜோதி வேண்டுகோள் விடுத்தாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் மாதாந்திரக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் ஒ.ஜோதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பூ.செந்தில்குமாரி, எஸ்.வி.மூா்த்தி, ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா் ஒ.ஜோதி பேசியதாவது:

கிராமத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க ஒரே குடும்பமாக இருந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். கோடை காலம் நெருங்குவதால் குடிநீா் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்வோம் என்றாா்.

கூட்டத்தில், செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும், குடிநீா் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட 78 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆக்கூா் முருகேசன், பொறியாளா்கள் ரவிமலா்வண்ணன், ரமேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஓன்றியக் குழுக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் த.ராஜு தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் நாகம்மாள் முன்னிலை வகித்தாா். மேலாளா் அரி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், மோகனரகு, பொறியாளா் வேளாங்கண்ணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய ஒன்றியத் தலைவா் த.ராஜு, கோடை காலம் தொடங்குவதால் குடிநீா் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உறுப்பினா்களும் குடிநீா் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com