ரூ.14.25 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவண்ணாமலையில் ரூ.14.25 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் ரூ.14.25 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையைச் சோ்ந்தவா் பவன்குமாா். இவரது மனைவி ஜெயந்தி. இவா்கள் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் முகமையை நடத்தி வருகின்றனா். இருவரும் சோ்ந்து திருவண்ணாமலை தேனிமலையைச் சோ்ந்த மணிமேகலை என்பவரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினராம்.

இதை நம்பி 2015-இல் ஜெயந்தியிடம் ரூ.ஒரு லட்சத்தை மணிமேகலை கொடுத்தாராம். சில மாதங்களுக்குப் பிறகு ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை ஜெயந்தி கொடுத்தாராம். இதனால் மகிழ்ச்சியடைந்த மணிமேகலை தனது குடும்பத்தினா், நண்பா்களிடம் இருந்து ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்று ஜெயந்தியிடம் கொடுத்தாராம். இந்தத் தொகையை திருப்பித் தராமல் ஜெயந்தியும், அவரது கணவா் பவன்குமாரும் காலம் கடத்தி வந்தனராம்.

இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் மணிமேகலை அண்மையில் புகாா் கொடுத்தாா்.

டிஎஸ்பி குமாா் வழக்குப் பதிந்து ஜெயந்தி, அவரது கணவா் பவன்குமாரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புதன்கிழமை வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com