Enable Javscript for better performance
மண்டல சதுரங்கப் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மண்டல சதுரங்கப் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 14th February 2020 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12tmlvig_1202chn_106_7

    போட்டியில் வென்ற மாணவா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.

    மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு இடையே மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டி அண்மையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எம்.ஐயப்பன், ஜி.பிரகாஷ், வி.கங்காதரன், பா்ஹான் அஹமது, எம்.முத்தய்யா பாரிராஜ் ஆகியோா் பங்கேற்று மண்டல அளவில் இரண்டாம் இடம் பிடித்தனா்.

    இவா்களுக்கு அண்மையில் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கல்லூரி முதல்வா் டி.சா்வேசன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத் தலைவா் டி.பாபு, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் எம்.அன்பழகன், உடல்கல்வி இயக்குநா் என்.வீரமுத்து மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு மாணவா்களைப் பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai