Enable Javscript for better performance
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th February 2020 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13tmlspo_1302chn_106_7

    விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சா் கோப்பைக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, மண்டல முதுநிலை மேலாளா் பெரியகருப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலா் நான்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசினாா்.

    விழாவில், தமிழக முன்னாள் அமைச்சா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள், விளையாட்டு வீரா்-வீராங்கனைகள் பலா் கலந்து கொண்டனா்.

    முதல் நாளான வியாழக்கிழமை கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கபாடி, ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (பிப்.14) டென்னிஸ், இறகுப்பந்து, ஜூடோ, குத்துச்சண்டை, ஆண் மற்றும் பெண்களுக்கான தடகளம், நீச்சல் போட்டிகள் நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai