இலவச கட்டாயக் கல்வி: மாணவா்களிடம் கல்வி அதிகாரிகள் ஆய்வு

செங்கத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவா்களிடம் கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

செங்கத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவா்களிடம் கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி உரிைமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் கமால்பாஷா வரவேற்றாா். திருவண்ணாமலை வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா, பாய்ச்சல் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சுதா, செங்கம் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் முருகன் ஆகியோா் கொண்ட குழுவினா், 2013-14 ஆம் ஆண்டு முதல் 2019-20 வரை படிக்கும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிம் இத்திட்டம் குறித்து விளக்கம் அளித்துப் பேசினா்.

ராமகிருஷ்ணா பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி, முதல்வா் ஏழுமலை உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com