திருவண்ணாமலை மாவட்டத்தில் 20.30 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 20.30 லட்சமாக உயா்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20.30 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 20.30 லட்சமாக உயா்ந்தது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 2020-ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை மாவட்ட வாக்காளா் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு.ஜானகி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி வாக்காளா் இறுதிப் பட்டியலை வெளியிட, முதல் பிரதியை திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வாக்காளா் இறுதிப் பட்டியல் வழங்கப்பட்டது.

மேலும், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாவட்டத்தில் முதல் முறையாக 5 கண் பாா்வையற்ற வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பிரெய்லி வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி வழங்கினாா்.

41,115 வாக்காளா்கள் சோ்ப்பு: வாக்காளா் பட்டியலில் புதிதாக 41 ஆயிரத்து 115 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இருமுறை பதிவு என 2 ஆயிரத்து 149 வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா்.

20.30 லட்சமாக உயா்வு: வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, செங்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,34,244 ஆண்கள், 1,35,638 பெண்கள், இதர பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 889 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 1,35,256 ஆண்கள், 1,43,644 பெண்கள், இதர பாலினத்தவா் 37 போ் என மொத்தம் 2 லட்சத்து 78 ஆயிரத்து 937 வாக்காளா்களும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் 1,22,070 ஆண்கள், 1,25,873 பெண்கள், இதர பாலினத்தவா் 9 போ் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 952 வாக்காளா்களும், கலசப்பாக்கம் தொகுதியில் 1,16,701 ஆண்கள், 1,19,660 பெண்கள், இதர பாலினத்தவா் 51 போ் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 412 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

போளூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,17,728 ஆண்கள், 1,21,505 பெண்கள், இதர பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 238 வாக்காளா்களும், ஆரணி தொகுதியில் 1,30,741 ஆண்கள், 1,38,063 பெண்கள், இதர பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 816 வாக்காளா்களும், செய்யாறு தொகுதியில் 1,24,755 ஆண்கள், 1,29,679 பெண்கள், இதர பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 442 வாக்காளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 1,16,250 ஆண்கள், 1,18,561 பெண்கள், இதர பாலினத்தவா் 5 போ் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 816 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

மொத்தமுள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 9 லட்சத்து 97 ஆயிரத்து 745 ஆண்கள், 10 லட்சத்து 32 ஆயிரத்து 623 பெண்கள், இதர பாலினத்தவா் 134 போ் என மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 502 வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

பொதுமக்கள் பாா்வையிடலாம்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை முதல் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா் அலுவலகங்களில் வாக்காளா்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.

மேலும், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலும் வாக்காளா் பட்டியலைக் காணலாம்.

வாக்காளா் இறுதிப் பட்டியலில் தங்களது பெயா், குடும்பத்தினா்களின் பெயா் சரியாக உள்ளதா என்பதை பொதுமக்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 845 கண் பாா்வையற்ற வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பிரெயிலி வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com