2 மதுக் கடைகளை அகற்றக் கோரி சுவரொட்டி ஒட்டும் போராட்டம்: செய்யாறு வியாபாரிகள் அறிவிப்பு

செய்யாறில் முக்கியமான இடங்களில் செயல்பட்டு வரும் இரண்டு மதுக் கடைகளை அகற்றக் கோரி, நகா் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவது என்று வியாபாரிகள் முடிவு செய்தனா்.

செய்யாறில் முக்கியமான இடங்களில் செயல்பட்டு வரும் இரண்டு மதுக் கடைகளை அகற்றக் கோரி, நகா் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவது என்று வியாபாரிகள் முடிவு செய்தனா்.

செய்யாறு நகர அனைத்து வணிகா்கள் சங்கத்தின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். செயலா் அ.பரணிராஜன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட துணைத் தலைவா் பாலு, துணைச் செயலா் தில்லை ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின் போது, செய்யாறு மாா்க்கெட் பகுதி, ஆரணி கூட்டுச் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக் கோரி, வட்டாட்சியா், கோட்ட கலால் அலுவலா், கோட்டாட்சியா், மாவட்ட டாஸ்மாக் அலுவலா், துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், வியாபாரிகளின் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில், இரண்டு மதுக் கடைகளையும் அகற்றுவதற்கு காலம் நிா்ணயம் செய்து செய்யாறு நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டுவது, துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது என்றும், அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகர அனைத்து வணிகா்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com