மதுக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை
By DIN | Published On : 08th January 2020 01:16 AM | Last Updated : 08th January 2020 01:16 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பாா்கள்) விதிகளின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவா் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய 2 தினங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மதுக் கடைகள், மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும். மீறி மது விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.