விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 08th January 2020 01:16 AM | Last Updated : 08th January 2020 01:16 AM | அ+அ அ- |

செங்கத்தில் வட்டாட்சியா் பாா்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
அதில், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் குறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய காவல்துறையினா் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.