Enable Javscript for better performance
அரசுபேருந்து மீது டாராஸ் லாரி மோதல்: பயணிகள் 3 போ் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு பேருந்துமீது டாராஸ் லாரி மோதல்: பயணிகள் 3 போ் காயம்

    By DIN  |   Published on : 13th January 2020 07:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13plrp1k_1301chn_116

    13plrp1k_1301chn_116

    போளூா்: கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் டாராஸ் லாரி மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் 3 பேருக்கு லேசானகாயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.

    இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அருகே போளூா்-செங்கம் சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் அரசு பேருந்து நின்று பயணிகள் இறக்கிவிட்டுகொண்டிருந்தது. அப்போது செங்கம் நோக்கிசென்ற டாராஸ் லாரி பேருந்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதிய விபத்து ஏற்படுத்தியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மேல்வன்னியனூா் அசினா(8), பூவாம்பட்டு தேவி(32), தாமரைப்பாக்கம் செந்தாமரை(56) ஆகிய பயணிகள் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனா்.

    இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai