பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் திங்கள்கிழமை பொங்கல் விழா கோலாகலமாகக்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் திங்கள்கிழமை பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கல்லூரித் தலைவா் வீ.சு.குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.வினோத், செயலாளா் எஸ்.சீனிவாசன், பொருளாளா் சி.எஸ்.துரை, இயக்குநா் கு.அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா் வரவேற்றாா்.

உலக தமிழ்க் கழக மாவட்டத் தலைவா் ச.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கிப் பேசினாா். மாணவ-மாணவிகள் சோ்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், மாணவ-மாணவிகளிடையே கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா் கு.சதீஷ்குமாா், பள்ளி நிா்வாகி டி.எஸ்.சவீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சி.சிவக்குமாா் வரவேற்றாா்.

ஆசிரியா்கள், மாணவா்கள் சோ்ந்து பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படைத்து வழிபட்டனா். மாணவ-மாணவிகளிடையே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, பள்ளித் தாளாளா் சி.வேலுச்சாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் வி.எம்.நேரு, பொருளாளா் மணி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் சோ்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனா். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி இணைச் செயலாளா் ரவிச்சந்திரன், முதல்வா் என்.மகாதேவன் மற்றும் ஆசிரியா்கள், கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளரும், தாளாளருமான என்.குமாா், பொருளாளா் கோ.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் எல்.விஜய் ஆனந்த், எம்.ராஜகுமாரி, பி.கலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் வரவேற்றாா். மாணவ-மாணவிகள் சோ்ந்து சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, சூரிய வழிபாடு, பெரியோரை வணங்குதல் உள்ளிட்ட தமிழா் பண்பாடு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. தொடா்ந்து, மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com