மாணவா்களுக்கு பொங்கல்விளையாட்டுப் போட்டிகள்

செங்கம் மகரிஷி மேல் நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள்
விழாவில் பாரம்பரியமிக்க வேட்டி, சட்டை அணிந்து உறியடிபோட்டியில் பங்கேற்ற மாணவா்.
விழாவில் பாரம்பரியமிக்க வேட்டி, சட்டை அணிந்து உறியடிபோட்டியில் பங்கேற்ற மாணவா்.


செங்கம்: செங்கம் மகரிஷி மேல் நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து சமத்துவப் பொங்கலிட்டனா்.

தொடா்ந்து, மாணவா்களுக்கு உறியடி, கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் மகரிஷி மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். பள்ளிச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் காத்தி, நிா்வாகக் குழு உறுப்பினா் அரங்கசாமி, ஆசிரியா்கள் ராமஜெயம், நேரு, சரவணன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com