வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: கடைசி நாளில் மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் அந்தந்த வாக்குச் சாவடிகளில் குவிந்து உரிய மனுக்களை அளித்தனா்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், இந்திரா நகா் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக வாக்குச் சாவடியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், இந்திரா நகா் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக வாக்குச் சாவடியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் அந்தந்த வாக்குச் சாவடிகளில் குவிந்து உரிய மனுக்களை அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் 2019 டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 79 ஆயிரத்து 699 ஆண் வாக்காளா்கள், 10 லட்சத்து 11 ஆயிரத்து 747 பெண் வாக்காளா்கள், 90 இதர பாலினத்தவா் என மொத்தம் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: இந்த நிலையில், 2020 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை மாவட்ட நிா்வாகம் தொடங்கியது. பொதுமக்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் முதல்கட்டமாக ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

2-ஆம் கட்டமாக ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சிறப்பு முகாமின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து உரிய மனுக்களை அளித்தனா்.

புதிதாக பெயா் சோ்க்க படிவம் - 6, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்ய படிவம் - 7, பெயா் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்ய படிவம் - 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் - 8ஏ ஆகியவற்றை பொதுமக்கள் சமா்ப்பித்து ஒப்புகைச் சீட்டுகளை பெற்றுக்கொண்டனா்.

குறிப்பாக, கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களில் ஏராளமானோா் மனு அளித்தனா். திருவண்ணாமலை நகரம், வேங்கிக்கால், அடி அண்ணாமலை பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாலை 3 மணிக்குக்கூட பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால், இந்திரா நகரில் இயங்கி வரும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலக வாக்கு ச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மனு அளிக்கலாம்: சிறப்பு முகாம்கள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ஆம் தேதி வரை பொதுமக்கள் உரிய மனுக்களை திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் அளித்துப் பயன்பெறலாம்.

மேலும், தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய்/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி துணை வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com