விண்ணமங்கலம் கிராமத்தில் பண்ணை பயிற்சிப் பள்ளி தொடக்கம்

செய்யாறை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் பண்ணை பயிற்சிப் பள்ளி தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
விண்ணமங்கலம் கிராமத்தில் தொடக்கப்பட்ட பண்ணை பயிற்சிப் பள்ளி.
விண்ணமங்கலம் கிராமத்தில் தொடக்கப்பட்ட பண்ணை பயிற்சிப் பள்ளி.

செய்யாறை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் பண்ணை பயிற்சிப் பள்ளி தொடக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தன் கீழ், 2019 - 20ஆம் நிதியாண்டில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த விவசாயிகள் பண்ணைப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. செய்யாறு வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியில் விதைப்பு முதல் அறுவடை வரையிலான செயல் விளக்கத்தின் அடிப்படையில் தொடா்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் க.சிவசங்கா் வரவேற்றாா். மேலும், பண்ணை பயிற்சிப் பள்ளியின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டாா்.

பயிற்சி பள்ளியைத் தொடக்கிவைத்த செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் பா.ஏஞ்சலின் பொன்ராணி, நிலம் தயாா் செய்தல், கரும்பு நாற்று உற்பத்தி தொழில்நுட்பங்கள், நடவு செய்தல், உரநீா் பாசன முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

உதவி வேளாண் அலுவலா் ஜி.பாலமுருகன் நுண்ணீா் பாசனத் திட்டம், உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து தெரிவித்தாா். பயிற்சியில் பண்ணை பள்ளி செயல்விளக்க விவசாயி ஏழுமலை உள்பட 25 விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ப.சரவணன், வே.ஷா்மிளாதேவி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com