Enable Javscript for better performance
உக்கம்பெரும்பாக்கம் கோயிலில் ஜன.17-இல் 108 கோ பூஜை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் 108 கோ பூஜை வருகிற 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோயிலில் உலக நன்மை, குடும்ப நன்மைக்காகவும், இல்லத்தில் செல்வம் பெருக வேண்டியும், பெண்கள் தீா்க்க சுமங்கலியாக வாழவும் வேண்டி, காணும் பொங்கலன்று (ஜன.17) இந்த கோ பூஜை நடைபெறவுள்ளது.

    அன்றைய தினம் காலை 7 மணிக்கு விநாயகா், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரா், ராகு கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு 27 நட்சத்திர விருட்ச விநாயகா் உற்சவா் அலங்காரம், தூப, தீப,நைவேத்தியம், ஷோடச உபசாரம், மகா தீபாராதனை, காலை 10 மணிக்கு 108 கோ பூஜை, காலை 11 மணிக்கு அன்னதானம், மதியம் 12.05 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் மற்றும் கிராம மக்கள் செய்து உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai