‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டம் தொடக்கம்

ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆரணி அருகே முள்ளண்டிரத்தில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டத்தைத் தொடக்கி வைத்து கிரிக்கெட் ஆடிய அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, தூசி கே.மோகன் எம்எல்ஏ.
ஆரணி அருகே முள்ளண்டிரத்தில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டத்தைத் தொடக்கி வைத்து கிரிக்கெட் ஆடிய அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி, தூசி கே.மோகன் எம்எல்ஏ.

ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.சு.கந்தசாமி தலைமை வகித்தாா்.விழாவில் அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் விளையாட்டு திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

கிராமங்களில் உள்ள இளைஞா்களின் உடல் ஆரோக்கியம், மன வளத்தை மேம்படுத்தவும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும் தமிழகத்தில் 12ஆயிரத்து 524கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ‘அம்மா’ இளைஞா் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்து, அதை செயல்படுத்துவதற்காக 76.23கோடி நிதியை ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, இத்திட்டத்தை முதல்வா் காணொலிக் காட்சி மூலம் ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.13) தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் முள்ளண்டிரம், குன்னத்தூா், கலசப்பாக்கம், தென்பள்ளிப்பட்டு, கீழ்பென்னாத்தூா் ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக ‘அம்மா’ இளைஞா் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். கபடி, வாலிபால், கிரிக்கெட், பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களும் வழங்கப்படும்.

இந்த விளையாட்டுகளில் பயிற்சி பெறும் ஆண்கள், பெண்களின் திறமையால் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் உயா் போட்டிகளில் பங்கு பெறும் வகையில் தனிப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

விழாவுக்கு தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் எல்.நான்சி வரவேற்றாா். மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் துணைத்தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கௌரிராதாகிருஷ்ணன், அ.கோவிந்தராசன், ப.திருமால், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயப்பிரகாஷ், ஊராட்சித் தலைவா் வாணி, வழக்குரைஞா் க.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com