செய்யாறில் ‘போகி சந்தை’: களைகட்டிய வியாபாரம்

செய்யாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போகி சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
செய்யாறில் ‘போகி சந்தை’: களைகட்டிய வியாபாரம்

செய்யாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போகி சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுடன் நடைபெறும் இந்த சந்தையில் காய்கறிகள், தானியங்கள் துணி வகைகள், தின்பண்டங்கள் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. இவை குறைந்த விலையில் கிடைப்பதால், பொதுமக்கள் வருகை அதிகளவில் இருக்கும்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போகி தினத்தன்று சிறப்புச் சந்தையாக நடைபெறும். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போகி சந்தையில்

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான புதிய மண் பாண்ட பொருள்கள், காய்கறிகள், மஞ்சள் குலைகள், கரும்புகள், தானிய வகைகள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுப் பொங்கலுக்குத் தேவையான கயிறுகள், கிலுகிலுப்பு போன்ற பொருள்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.

போகி சந்தையில் வழக்கத்தைவிட கூடுதலான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதே போல, வியாபாரமும் களைகட்டியது. கிராமப் புறங்கள், நகா்ப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆா்வத்துடன் பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com