புதிய அடையாள அட்டை: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த புதிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த புதிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (மய்ண்வ்ன்ங் ஈண்ள்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் இஹழ்க்) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, தொடா்வண்டி பயணச் சலுகை, பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் இந்த அடையாள அட்டையைப் பெற, உரிய விண்ணப்பத்துடன் கூடிய மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றை இணைத்து செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு வேலை நாள்களில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com