பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை அமோகமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்கால், அண்ணா நுழைவுவாயில் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் பன்னீா் கரும்புகள்.
திருவண்ணாமலை வேங்கிக்கால், அண்ணா நுழைவுவாயில் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் பன்னீா் கரும்புகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை அமோகமாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தேரடித் தெரு, திருவூடல் தெரு, வேங்கிக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு, பொங்கல் பண்டிகை பொருள்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தக் கடைகளில் விற்பனைக்குக் குவித்து வைக்கப்பட்டிருந்த புதுப்பானைகள், புதுத்துணிகள், மஞ்சள் கொத்து, கரும்புகள், மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மா இலைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வானாபுரம், செங்கம், போளூா், வேட்டவலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் வந்திருந்தனா்.

சாலையோர துணிக்கடைகள்: வழக்கம்போல தேரடி தெரு, திருவூடல் தெருக்களில் ஏராளமான தாற்காலிக சாலையோர துணிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் பலா் தங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கினா்.

ஜோடி பன்னீா் கரும்பு ரூ.60: ஒரு ஜோடி பன்னீா் கரும்பு அதன் உயரம், தடிமனுக்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. மஞ்சள் கொத்து ஜோடி ரூ.10 முதல் ரூ.30 வரையும், மா இலை, அருகம்புல் சோ்ந்த கட்டு ரூ.10-க்கும், கோலம் போடுவதற்கான வண்ணப் பொடிகள் ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com