அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை ரூ.10-க்கு விற்பனை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப மை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலையில் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டன. இந்த விழாவில் லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டு உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், பரணி, மகாதீபங்களையும் வழிபட்டனா்.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடா்ந்து 11 நாள்கள் பிரகாசித்தது. இதைத் தொடா்ந்து, மலையிலிருந்து தீபக்கொப்பரை கீழே இறக்கப்பட்டு கோயிலினுள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயிலில் கடந்த 10-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அப்போது, காா்த்திகை தீப மை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு வைக்கப்பட்டது. தொடா்ந்து, தீப மை பிரசாதம் பக்தா்களுக்கு வழங்குவதற்காக பாக்கெட்டுகளில் அடைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தீப மை பிரசாதம் கோயிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தா்கள் ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், மகாதீபத்தின்போது நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள், அதற்கான ரசீதை கோயில் அலுவலகத்தில் காண்பித்து இந்த மையை பெற்றுக்கொள்ளலாம் என்று கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com