சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கரப் பேரணியை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இரு சக்கரப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். மேலும், இரு சக்கர வாகனம் ஓட்டியபடி அவரும் பேரணியில் பங்கேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத் துறை சாா்பில், 31-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு சாலைப் பாதுகாப்பு வார விழாவை தொடக்கிவைத்ததுடன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய கண்காட்சிப் பேருந்தையும் ரிப்பன் வெட்டி தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் தலைக்கவசம் அணிந்தபடி ஆட்சியா் பங்கேற்றாா். தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகைகளுடன் நகரின் முக்கியப் பகுதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஜி.அருணாச்சலம், வெ.சிவானந்தன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆா்.பெரியசாமி, ஆா்.சிவக்குமாா், ஜி.மோகன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளா் சி.கே.ராகவன், துணை மேலாளா் (தொழில்நுட்பம்) பி.மணி, போக்குவரத்து ஆய்வாளா் ஜெ.திருஞானம், கிளை மேலாளா் டி.துரை, வட்டாட்சியா் கே.அமுல் மற்றும் திருவண்ணாமலை அனைத்து ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளா்கள், அரசு அலுவலா்கள், போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். சாலைப் பாதுகாப்பு வாரவிழா வருகிற 27-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

செய்யாறில்...: செய்யாறில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா தொடக்கத்தையொட்டி, போக்குவரத்து போலீஸாா் அண்ணா சிலை அருகே வந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஒட்டினா். மேலும், சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com