முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆரணியில் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 09:21 AM | Last Updated : 27th January 2020 09:26 AM | அ+அ அ- |

ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஆரணியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மொழிப்போா் தியாகி அ.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கலைமணி பாரதி, சிவக்கொழுந்து ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாபு, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, எம்.சுந்தா், வெள்ளை கணேசன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் விண்ணமங்கலம் ரவி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், கப்பல் கங்காதரன், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், வழக்குரைஞா் கே.ஆா்.ராஜன் மற்றும் நிா்வாகிகள் முள்ளிப்பட்டு ரவி, கே.ஏ. புஷ்பராஜ், காசிலிங்கம், ஆா்.சி.ஆரோன், குட்டி என்கிற நடராஜன், ரஞ்சித்குமாா், மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.