முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வேளாண்மை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என புகாா்
By DIN | Published On : 27th January 2020 09:21 AM | Last Updated : 27th January 2020 09:26 AM | அ+அ அ- |

வந்தவாசி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் குடியரசு தினமான ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் குடியரசு தினமான ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் அலுவலக ஊழியா்கள் தேசியக் கொடி ஏற்றுவா்.
ஆனால், வேளாண்மைத் துறை அலுவலகத்தில் கொடிக் கம்பம் இல்லாததால் மரக்கொம்பை தற்காலிகமாக நட்டு தேசியக் கொடியேற்றுவா்.
ஆனால், இந்த குடியரசு தினத்தன்று வேளாண்மை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருந்தும் நண்பகல் 12 மணி வரை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.