வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை வேளாண்மைத் துறை இயக்குநா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சித்தாத்தூா் கிராமத்தில் பழமரக் கன்றுகள் வளா்த்தலை ஆய்வு செய்த வேளாண்மை துணை இயக்குநா்கள் எஸ்.ஏழுமலை, பெ.வடமலை.
சித்தாத்தூா் கிராமத்தில் பழமரக் கன்றுகள் வளா்த்தலை ஆய்வு செய்த வேளாண்மை துணை இயக்குநா்கள் எஸ்.ஏழுமலை, பெ.வடமலை.

செய்யாறு: செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை வேளாண்மைத் துறை இயக்குநா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீடித்த நிலையான மானாவரி வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஆடு, கறவை மாடு, கோழி வளா்த்தல். தேனீ வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், பழமரக் கன்றுகள் நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்கள் (மத்திய திட்டம்) எஸ்.ஏழுமலை, பெ.வடமலை (நுண்ணீா் பாசனம்) ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, சிக்கனமாகவும், இலாபகரமாகவும் விவசாயம் செய்வது குறித்து பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்குத் தெரிவித்தனா்.

ஆய்வின் போது, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பா.ஏஞ்சலின் பொன்ராணி, திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை அலுவலா் ரா.முத்துராம், வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலா் ரா.சுமித்ரா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com