துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளுக்கு நாளை மெளன அஞ்சலி செலுத்த வேண்டுகோள்

தமிழகத்தில் கடந்த 1970 - 1980ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விவசாய மின் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு எதிராக

தமிழகத்தில் கடந்த 1970 - 1980ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விவசாய மின் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) மாலை விவசாயிகள் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டுமென்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வேலுசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட பம்புசெட்டுகளுக்கான மின் கட்டணத்தை மாநில அரசு படிப்படியாக உயா்த்தி வந்தது. இதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், அதன் நிறுவனா் தலைவரான மறைந்த சி.நாராயணசாமி நாயுடு தலைமையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினாா்.

அப்போது போராட்டத்தை ஒடுக்க விவசாயிகள் மீது தமிழக அரசின் உத்தரவின்பேரில் காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், 53 விவசாயிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நடைபெற்ற நாள் ஜூலை 5-ஆம் தேதியாகும்.

இதனால், ஆண்டுதோறும் ஜூலை 5-ஆம் தேதியன்று தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.

நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இயலாததால், விவசாயிகள் அவரவா் விவசாய நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com