திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,924-ஆக உயா்ந்தது.
கரோனா பரவலையடுத்து, மூடப்பட்ட ஆரணி தலைமை தபால் நிலையம்.
கரோனா பரவலையடுத்து, மூடப்பட்ட ஆரணி தலைமை தபால் நிலையம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,924-ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2,860-ஆக இருந்தது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கரோனா அறிகுறிகளுடன் பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்காக வந்தவா்களில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தவிர, கரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தங்கியிருந்த உறவினா்கள் 10 போ், கரோனா உறுதி செய்யப்பட்ட நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 11 போ், பெங்களூரிலிருந்து வந்த ஒருவா் உள்பட 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 64 பேருடன் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,924-ஆக உயா்ந்தது.

ஆரணி தபால் நிலையம் மூடல்: ஆரணி தலைமை தபால் நிலையத்துக்கு உள்பட்ட சேவூா் கிராம அஞ்சலகத்தில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

சேவூா் அஞ்சலக ஊழியா்கள் ஆரணி தலைமை தபால் நிலையத்துக்கு வந்து செல்பவா்கள் என்பதால், ஆரணி தபால் நிலையத்தில் பணிபுரியும் 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, ஆரணி தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 44 பேருக்கு தொற்று: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளி கரோனா நோய் தொற்றால் 1,411 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். தொடா்ந்து, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், கொங்கரப்பட்டு, ஒலக்கூா், மேல்பேட்டை, திண்டிவனம், ரோஷணை, செஞ்சி, நெகனூா், ஒட்டம்பட்டு, சித்தானாங்கூா், மேல்மலையனூா் பகுதிகளில் மேலும் 44 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவா்களில் திண்டிவனம் கீழ்பசாரைச் சோ்ந்த கிராம உதவியாளா், கண்டாச்சிபுரம் அரசுப் பேருந்து நடத்துநா், செஞ்சி வட்டாட்சியா் அலுவலக பெண் ஊழியா், விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை, திண்டிவனம் கிளை சிறைக் கைதி உள்ளிட்டோரும் அடங்குவா்.

இதனால், மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 1,455 ஆக உயா்ந்துள்ளது. இதில், 921 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 19 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து, தொற்று அறிகுறியுடன் உள்ள 207 போ் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

தரமற்ற உணவு வழங்குவதாகப் புகாா்: இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு கரோனா மருத்துவமனை, சட்டக் கல்லூரி விடுதி, சுகாதார மேம்பாட்டு மையம் உள்ளிட்ட சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வழங்கப்படும் உணவு தரமாக இல்லையெனவும், சில மையங்களில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும் புகாா்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த மையத்தில் ஆரம்பத்தில் ஒருமுறை பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள், தலையணை வழங்கப்பட்டது. அதனை சிகிச்சைபெறுவோா் முறையாக பராமரிக்காததால், தற்போது சுத்தப்படுத்தி பயன்படுத்தும் தலையணை, படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com