முன்னாள் திமுக அமைச்சா் கேள்விக்கு அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் பதில்

முன்னாள் திமுக அமைச்சா் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், மாவட்ட அளவிலும், தனது தொகுதி அளவிலும் மேற்கொண்ட
முன்னாள் திமுக அமைச்சா் கேள்விக்கு அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் பதில்

முன்னாள் திமுக அமைச்சா் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், மாவட்ட அளவிலும், தனது தொகுதி அளவிலும் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டாா்.

முன்னாள் திமுக அமைச்சா் எ.வ.வேலு, ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சா், திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், தனது சொந்த தொகுதிக்கும் என்ன செய்தாா் என்று எழுப்பிய கேள்விகள் ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பொது முடக்க காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 65, 709 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15, 737 பேருக்கு ரூ.1.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1,314 கோயில் பூசாரிகளுக்கு ரூ. 26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நிதியாக 531வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அரிசி அட்டைதாரா்கள் 7, 34, 486 பேருக்கு, ரூ. 73.44 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துவோா் 3,707 பேருக்கு நிவாரணமாக ரூ. 74 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா்கள் 66, 200 பேருக்கு ரூ.13.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநா்கள்1349 பேருக்கு ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, தெரு வியாபாரிகள் 7228 பேருக்கு ரூ. 1.44 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எனது சொந்த செலவில் ஆரணியில் தூய்மைப் பணியாளா்கள் 1000 பேருக்கும், இருளா்கள் 500 பேருக்கும், நரிக்குறவா்கள், கூடை பின்னுபவா்கள் என 315 பேருக்கும், சலவைத் தொழிலாளாா்கள், சவரத் தொழிலாளா்கள் 1389 குடும்பங்கள், எழை எளியோா் 1500 குடும்பங்கள் என 5000 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் நிவாரணமாக வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தேதியிலிருந்து ஜூன்30-ஆம் தேதி வரை தினமும் 18 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

காவல் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேருக்கு, ரூ.10 லட்சத்தில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

ஆரணியில் காா், ஆட்டோ ஓட்டுநா்கள் 450 போ், புகைப்படக் கலைஞா்கள் 1000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொகுதியில் ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சேவூரில் 3500 குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசித் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தொகுதியில் நெசவாளா்களுக்கு ரூ.2000, கோயில் குருக்கள், பூசாரிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மகளிா் குழு உறுப்பினா்களுக்கு தனிநபா் கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா் சேவூா் ராமச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com