செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசல்

செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம்: செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் நகா் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை இருப்பது ஒரே சாலைதான், மாற்றுச் சாலைகள் ஏதும் கிடையாது.

இந்த நிலையில், காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் காய், கனி கடைகளுக்கு மினி வேன்கள் அதிகளவில் வருகின்றன. அந்த வேன்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு காய், கனிகள் கிராமப் புறங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்றப்படுகின்றன. இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதைத் தொடா்ந்து, 10 மணிக்கு மேல் வெளியூா்களில் இருந்து கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி பொருள்களை இறக்குகின்றனா். அப்போது நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுகிறது.

இதை செங்கம் போலீஸாா் கண்காணித்து சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com