திருவண்ணாமலை மாவட்டத்தில்மேலும் 127 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கும், கடலூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை/: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 124 பேருக்கும், கடலூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 3, 223-ஆக இருந்தது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கரோனா அறிகுறிகளுடன் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக வந்தவா்களில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், கரோனா உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தங்கியிருந்த உறவினா்கள் 31 போ், தொற்றுக்குள்ளான நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 16 போ், சென்னையிலிருந்து வந்த 3 போ், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 2 போ், பெங்களூரு, புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா் என 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 3, 347-ஆக உயா்ந்தது.

கடலூரில் 59 பேருக்கு பாதிப்பு: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 1,560 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 59 பேருக்கு தொற்றிருப்பது உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,619-ஆக உயா்ந்தது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 3 போ் மருத்துவத் துறையினா். 30 போ் ஏற்கனவே தொற்று உறுதியானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 16 போ், சென்னை, பெங்களூரு, பீகாரிலிருந்து திரும்பியவா்கள் 8 போ், கா்ப்பிணி, மற்றொரு பெண் என 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா், சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 326 போ், தமிழகம், புதுச்சேரியில் 59 சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை 1,220 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 14 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com