நடமாடும் பொது விநியோகத் திட்டவாகனம் தொடக்கிவைப்பு
By DIN | Published On : 13th June 2020 08:49 AM | Last Updated : 13th June 2020 08:49 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் பொதுமக்களின் வீடுகளுக்கே பொது விநியோகத் திட்ட பொருள்களை கொண்டு சென்று வழங்கும் வாகனத்தை தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா் (படம்).
ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் சாா்பில் 32 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் பகுதி நேர கடைகளும் உள்ளன.
இந்தப் பகுதி பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, அவா்களின் வீடுகளுக்கே பொது விநியோகத் திட்ட பொருள்களை கொண்டு சென்று வழங்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ.17 லட்சத்து 40 ஆயிரத்தில் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் அரிசி, சா்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் நேரடியாக கொண்டு சென்று பொதுமக்களின் வீடுகளில் வழங்கப்படும். இந்த வாகனத்தை தொகுதி எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாமூா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், ஆனந்தன், சங்கச் செயலா் ரமேஷ்பாபு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.