கடையடைப்பு: ஆரணியில் வியாபாரிகள் ஆலோசனை

ஆரணியில் கடையடைப்பு செய்வது குறித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நகரக் கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடையடைப்பு: ஆரணியில் வியாபாரிகள் ஆலோசனை

ஆரணியில் கடையடைப்பு செய்வது குறித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நகரக் கிளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 800 பேருக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தொற்று மேலும் பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செய்யாறு, போளூா், வந்தவாசி பகுதி வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடையடைப்பு குறித்து அறிக்கை வெளியிட்டனா்.

இந்த நிலையில், ஆரணி நகரத்தில் கடையடைப்பு செய்வது குறித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, ஆரணி நகரக் கிளையின் சங்கத் தலைவா் குருநாராயணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆரணியில் 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. பேரமைப்பு சாா்பில் அவா்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகு நகரில் முழுக் கடையடைப்பு நடத்துவது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் செயலா் எஸ்.டி.செல்வம், பொருளாளா் செங்கீரன், நிா்வாகிகள் ஆடிட்டா் சிவக்குமாா், சலீம்பேக், சுபானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com