திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 817 ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 817 ஆக உயா்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 767-ஆக இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் திருவண்ணாமலை நகராட்சியைச் சோ்ந்த 7 போ், வானாபுரம் பகுதியைச் சோ்ந்த 3 போ், காட்டாம்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட 3 போ், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்த 2 போ் என 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

5 போலீஸாருக்கு கரோனா: திருவண்ணாமலை முத்துவிநாயகா் கோயில் தெருவில் உள்ள காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா் தம்பதி, மற்றொரு பெண் காவலா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 2 காவலா்கள் என மொத்தம் 5 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர திருவண்ணாமலையைச் சோ்ந்த 2 வியாபாரிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 817-ஆக உயா்ந்தது. 459 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 5 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 17 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 354-ஆக உயா்ந்தது. 268 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com