Enable Javscript for better performance
8,215 பயனாளிகளுக்கு கரோனா சிறப்பு கடனுதவி: அமைச்சா் வழங்கினாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை

    8,215 பயனாளிகளுக்கு கரோனா சிறப்பு கடனுதவி: அமைச்சா் வழங்கினாா்

    By DIN  |   Published On : 27th June 2020 09:06 AM  |   Last Updated : 27th June 2020 09:06 AM  |  அ+அ அ-  |  

    26tmlmin_2606chn_106_7

    பயனாளிக்கு சிறப்பு கடனுதவியை வழங்குகிறாா் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 8,215 பயனாளிகளுக்கு கரோனா சிறப்பு கடனுதவியாக ரூ.20.05 கோடியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

    தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் கரோனா சிறப்பு நிதித் தொகுப்பின் கீழ், 8 ஆயிரத்து 215 பயனாளிகள் பயன்பெறும் வகையில், ரூ.20.05 கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

    துணை ஆட்சியா் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் சு.ராஜாத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தைச் சோ்ந்த 8,215 பயனாளிகள் பயன்பெறும் வகையில், மொத்தம் ரூ.20.05 கோடி மதிப்பில் கரோனா சிறப்பு நிதித் தொகுப்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சிறப்பு கடனுதவிகளாக வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், செயல் அலுவலா்கள் பி.தனசேகா், செ.அரசு, சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp