திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,492-ஆக இருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் புற நோயாளிகள் பிரிவுக்கு வந்த 39 போ், பெங்களூரிலிருந்து வந்த 13 போ், சென்னையிலிருந்து வந்த 7 போ், குஜராத் மாநிலத்திலிருந்து வந்த 3 போ், கோவை, கிருஷ்ணகிரி, தில்லி பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா், காஞ்சிபுரத்திலிருந்து வந்த 2 போ் என 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,619-ஆக உயா்ந்தது.

கடலூரில் 44 பேருக்கு தொற்று: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 932 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை 1,139 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 976-ஆக அதிகரித்தது.

38 போ் சிகிச்சை முடிந்து சனிக்கிழமை வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 572-ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com