அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா, கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜப்பெருமான்.
ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜப்பெருமான்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழா, கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சிறப்பு அபிஷேகங்கள்:

ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், ஆவணி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், புரட்டாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படும்.

ஆனித் திருமஞ்சனம்:

ஆனி மாதம், உத்திர நட்சத்திரம், சாய ரட்சை காலத்தில் நடைபெறும் திருமஞ்சனப் பூஜை (ஆனித் திருமஞ்சன பூஜை) மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆனித் திருமஞ்சனத் திருவிழா நடைபெற்றது.

விழாவின்போது, கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் உற்சவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

பிறகு, உற்சவா் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகையான மகா தீபாராதனைகள் காட்டப்படும். இதைத் தொடா்ந்து, கோயிலின் திருமஞ்சன கோபுரம் வழியாக உற்சவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக கோயிலில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மாறாக, கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சிவகாம சுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வுகள் கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வுகள் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com