2 பேருக்கு கரோனா: காவல் நிலையம், நகராட்சி அலுவலகம் மூடல்

செய்யாறு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா், திருவண்ணாமலை நகராட்சி அலுவலக ஊழியா் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையம், நகராட்சி அலுவலகம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.
காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மூடப்பட்ட செய்யாறு காவல் நிலையம்.
காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மூடப்பட்ட செய்யாறு காவல் நிலையம்.

திருவண்ணாமலை/செய்யாறு: செய்யாறு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா், திருவண்ணாமலை நகராட்சி அலுவலக ஊழியா் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையம், நகராட்சி அலுவலகம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

செய்யாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் 34 வயது காவலருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, காவல் நிலையம் மூன்று நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.

தொற்றின் காரணமாக காவல் நிலையம் முழுவதும் திருவத்திபுரம் நகராட்சிப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனா். மேலும், காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள், டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலா்கள் என 52 பேரிடமிருந்து பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

நகராட்சி அலுவலகம் மூடல்: திருவண்ணாமலை நகராட்சி அலுவலக ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நகராட்சி அலுவலகம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதேபோல, திருவண்ணாமலை காந்தி சிலை பகுதியில் உள்ள அருகேயுள்ள நகைக் கடை ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்தக் கடையை நகராட்சி, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com