முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
By DIN | Published On : 03rd March 2020 06:32 AM | Last Updated : 03rd March 2020 06:32 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டில் மது போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சேத்துப்பட்டு லூா்து நகரைச் சோ்ந்த தேவபாலன் மகன் நவீன் (21). இவா் திங்கள்கிழமை காலை சேத்துப்பட்டு நான்கு முனைச் சந்திப்பு பகுதியில் சைக்கிளில் சென்றபோது, திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது உரசிவிட்டதாகக் கூறி நவீன் வாக்குவாதம் செய்து ஓட்டுநரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
தொடா்ந்து, சைக்கிளைத் தூக்கி பேருந்தை தாக்கச் சென்றாராம். இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் நவீனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா், வந்தவாசி பணிமனையைச் சோ்ந்த தேவபாலன் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் நந்தினிதேவி வழக்குப் பதிவு செய்து, நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.