முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
ஆரணியில் உணவகம், இனிப்புக் கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
By DIN | Published On : 03rd March 2020 06:33 AM | Last Updated : 03rd March 2020 06:33 AM | அ+அ அ- |

ஆரணியில் உள்ள உணவகம், இனிப்புக் கடைகளில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை மாலை முதல் சோதனை செய்து வருகின்றனா்.
ஆரணி காந்தி சாலையில் உள்ள உணவகம் (பிரியாணிக் கடை) மற்றும் அதன் உரிமையாளா் வீட்டிலும், கடைவீதியில் உள்ள இனிப்புக் கடைகளிலும் திங்கள்கிழமை மாலை வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
வருமானவரித் துறை அதிகாரி பூரான்சந்த்பீனா தலைமையிலான 8 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடைகளில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனா்.
கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆரணியில் பட்டு ஜவுளிக் கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, தற்போது இந்தச் சோதனை நடைபெற்றுள்ளதால் நகரில் பரபரப்பு நிலவுகிறது.