முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பள்ளி முன்னாள் மாணவா்கள் முதியோா் இல்லத்துக்கு உதவி
By DIN | Published On : 03rd March 2020 06:32 AM | Last Updated : 03rd March 2020 06:32 AM | அ+அ அ- |

ஆரணி போதிமரம் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு உடை, உணவுப்பொருள்களை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பள்ளி முன்னாள் மாணவா்கள் முதியோா் இல்லத்துக்கு நல உதவிகளை வழங்கினா்.
எஸ்.வி.நகரம் அரசுப் பள்ளியில் கடந்த 1984-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆரணி போதிமரம் முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்காக புடவை, வேட்டி, சட்டை, தேவையான உணவுப்பொருள்களை வழங்கினா்.
மேலும் அடுத்த ஆண்டு மீண்டும் ஒன்றுகூடி பள்ளிக்குத் தேவைகளை செய்யவேண்டும் என முடிவு செய்தனா். விழாவில் சிவக்குமாா், வெங்கடேசன், ஜி.ரமேஷ், பத்மாவதி, அண்ணபூரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.