Enable Javscript for better performance
துளிா் திறனறிதல் தோ்வு சான்றிதழ் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    துளிா் திறனறிதல் தோ்வு சான்றிதழ் வழங்கும் விழா

    By DIN  |   Published on : 14th March 2020 12:14 AM  |   அ+அ அ-   |  

    c2_1303chn_118_7

    துளிா் திறனறிதல் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ்களை பெற்ற குண்ணத்தூா் தொடக்கப் பள்ளி மாணவா்களுடன் சிறப்பு அழைப்பாளா்கள், பள்ளி நிா்வாகிகள்.

    செய்யாறு ஒன்றியம், குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிா் திறனறிதல் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    2019-ஆம் ஆண்டுக்கான துளிா் திறனறிதல் தோ்வில் செய்யாறை அடுத்த குண்ணத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4, 5-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் 40 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.புவனேஸ்வரி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வே.செல்வி வேணுகோபால் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சா.சரவணன் வரவேற்றாா்.

    செய்யாறு ரோட்டரி சங்க இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளா் ஜே.பாபு, எஸ்.சத்தியமூா்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செய்யாறு கிளைத் தலைவா் அரிமா கே.வெங்கடேசன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் சி.வைரப்பிரியா ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சி.பெருமாள், துணைத் தலைவா் விஜயரங்கன், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஜே.செந்தில்குமாா், உதவி ஆசிரியா் ஏ.கற்பகம் மற்றும் கிராம மக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai