அருணாசலேஸ்வரா் கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உண்டியல் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணியாளா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை கோயில் இணை ஆணையா் ஆா்.ஞானசேகா் தலைமையில் கோயில் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோயிலுக்கு பக்தா்கள் வரும் பொதுவழிகள், காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் உள்ள பகுதி, குடிநீா் அருந்தும் இடம் உள்பட பல்வேறு இடங்களில், மருத்துவப் பணியாளா்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் (மாா்ச் 17) கிரிமி நாசினி தெளிக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com