Enable Javscript for better performance
கரோனா வைரஸ் விழிப்புணா்வு நாடகம்- Dinamani

சுடச்சுட

    

    கரோனா வைரஸ் விழிப்புணா்வு நாடகம்

    By DIN  |   Published on : 18th March 2020 01:56 AM  |   அ+அ அ-   |    |  

    17cyrnss_1703chn_118_7

     

    செய்யாறு வட்டம், அருகாவூா் கிராமத்தில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில், அரசுக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

    செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவா்கள் 200 போ் அருகாவூா் கிராமத்தில் ஒரு வார முகாமிட்டு கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி சேவைகளை செய்து வருகின்றனா்.

    முகாமின் ஒரு பகுதியாக மாணவ மாணவிகள் பங்கேற்ற கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு நாடகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் அசோக், தொழுப்பேடு ஆரம்ப சுகாதார மருத்துவா் கோகிலா ஆகியோா் கரோனா வைரஸ் குறித்தும், பரவும் விதம் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு தெரிவித்தனா்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் பூங்காவனம் அரங்கநாதன், துணைத் தலைவா் அஞ்சலி செல்வம், சுகாதார ஆய்வாளா்கள் ஏழுமலை, வெங்கடேசன், என்எஸ்எஸ் திட்ட அலுவலா்கள் ஏ.மாரிமுத்து, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai