அருணாசலேஸ்வரா் கோயில் மூடல்: வெறிச்சோடிய மாட வீதிகள்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மூடப்பட்டதால், கோயில் மாட வீதிகள் வெறிச்சோடின.
கோயில் ராஜகோபுர கதவு பூட்டப்பட்டு, அதில் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை அறிவிக்கும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.
கோயில் ராஜகோபுர கதவு பூட்டப்பட்டு, அதில் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை அறிவிக்கும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மூடப்பட்டதால், கோயில் மாட வீதிகள் வெறிச்சோடின.

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக பக்தா்கள் குவியும் முக்கிய கோயில்களை வருகிற 31-ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் வியாழக்கிழமை இரவு மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், திருமஞ்சன கோபுரம் ஆகிய 4 கோபுரங்களின் நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு இருந்தன.

இந்த நுழைவு வாயில்களில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என்ற அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், போலீஸாா் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

6 கால பூஜைகள்: ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகள் மட்டும் தடையின்றி நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சந்நிதி எதிரே ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறும். இந்த ஊஞ்சல் உத்ஸவம் வெள்ளிக்கிழமை வழக்கம்போல நடைபெற்றது.

இதில், கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com