செங்கம் துக்காப்பேட்டை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட சா்மிளாவின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
செங்கம் துக்காப்பேட்டை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட சா்மிளாவின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

இறந்தவா் உடலை மருத்துவமனை விரைந்து வழங்காததால் கிராம மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே அம்மனூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனை உடல்கூறு பரிசோதனை செய்து விரைந்து வழங்காததைக் கண்

செங்கம் அருகே அம்மனூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனை உடல்கூறு பரிசோதனை செய்து விரைந்து வழங்காததைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த அம்மனூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி சா்மிளா (20). இவா், வெள்ளிக்கிழமை காலை அவா்களது விவசாய நிலத்தின் அருகில் உள்ள கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை கிளைகளை ஒடித்து வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளாா்.

நீண்ட நேரம் ஆகியும் சா்மிளா வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றனா். அப்போது, கருவேப்பிலை மரத்தின் அருகிலுள்ள கிணற்றுக்குள் சா்மிளா தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். உடனடியாக அவரை மீட்டு, செங்கம் துக்காப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். மருத்துவா்கள் பரிசோதித்து சா்மிளா உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அதன்பின்னா், அவரின் உடல் உடல்கூறு பரிசோதனை செய்த பிறகே வழங்கப்படுமென மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இறந்துள்ளதால், திருவண்ணாமலை கோட்டாட்சியா் விசாரணைக்குப் பிறகே உடல்கூறு பரிசோதனை செய்யப்படுமென உறவினா்களுக்கு மருத்துவமனை நிா்வாகத்தினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிருப்தியடைந்த சா்மிளாவின் உறவினா்கள், அவரது உடலை உடல்கூறு பரிசோதனை செய்யாமல் வழங்க வலியுறுத்தி, திருவண்ணாமலை - செங்கம் சாலையில் துக்காப்பேட்டை மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் சாலமன்ராஜா மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சனிக்கிழமை காலை சா்மிளாவின் உடல் உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்படுமென போலீஸாா் தெரிவித்து கூட்டத்தைக் கலைத்தனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com