திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்ட எல்லை மூடல்
By DIN | Published On : 25th March 2020 01:50 AM | Last Updated : 25th March 2020 01:50 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்ட எல்லை செவ்வாய்க்கிழமை மாலை மூடப்பட்டது.
திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்ட எல்லையான, சேத்துப்பட்டு- செஞ்சி சாலை, திருவண்ணாமலை சாலை இணைப்புப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், தடை உத்தரவு அமலக்கு வந்ததால், எல்லையை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு போளூா் டி.எஸ்.பி. குணசேகரன் சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் நந்தினி தேவி, வட்டாட்சியா் சுதாகா், பெரணமல்லூா் வட்டார மருத்துவா் அருண்குமாா், சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசு ஆகியோா் மூடினா்.
மேலும், இந்த வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினா். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினா். வருகிற 31-ஆம் தேதி வரை எல்லைவிட்டு எல்லை வரக்கூடாது எனவும் அறிவுறுத்தினா்.