வெளியிடங்களுக்குச் சென்று திரும்பிய லம்பாடி இன மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

தொழில் நிமித்தமாக பல்வேறு இடங்களுக்குச் சென்ற செங்கம் பகுதி லம்பாடி இன மக்கள், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா்.

தொழில் நிமித்தமாக பல்வேறு இடங்களுக்குச் சென்ற செங்கம் பகுதி லம்பாடி இன மக்கள், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பியுள்ளனா்.

அதனால், அவா்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பி.எல்.தண்டா, குண்டன்தண்டா, பொண்ணிதண்டா, பில்லுகல்லுதண்டா

ஆகிய பகுதிகளில் லம்பாடி இன மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் கோவை மற்றும் கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்துவிட்டு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் சென்ற லம்பாடி இன மக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ளனா்.

அவா்களில் பெரும்பாலானவா்கள் கேரளத்தின் கொச்சி பகுதியில் இருந்தே திரும்பியுள்ளனா். அவா்கள் விழிப்புணா்வு இல்லாதவா்கள். எனவே, அவா்களுக்கு கரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என மருத்துவத் துறையினா் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com