அம்மா உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு அமைச்சா் ஏற்பாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு தங்களது சொந்த செலவில் இலவசமாக உணவு வழங்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு தங்களது சொந்த செலவில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்எல்ஏ ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நான்கு நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

இந்த உணவகங்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவகங்கள் மூலம் தினமும் 300 தயிா் சாதம், 300 சாம்பாா் சாதம், 1000 இட்லி ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவை அமைச்சரும், செய்யாறு எம்எல்ஏவும் ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இத்திட்டத்தை ஆரணி அம்மா உணவகத்தில் ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் கணேசன், மேலாளா் நெடுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com